ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
மர்மமான முறையில் மரணம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸ் சேவையில் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபர் ஆவார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களில் சி.டி. விக்ரமரத்னவும் ஒருவர்.

சமகால அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சி.டி. விக்ரமரத்ன திடீரென உயிரை மாய்த்துக் கொண்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.