ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தும் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (19.12.2024) அறிவிக்கப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும், அதன்படி ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு அறிவிப்பு
எவ்வாறாயினும், ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பித்த சமர்ப்பணத்தில் தமது கட்சிக்காரருக்கு சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், பிடியாணை பிறப்பித்துள்ளதோடு தீர்ப்பு அறிவிப்பை ஜனவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |