லண்டனின் கிரென்பெல் கோபுர தீ விபத்து.. பிரித்தானிய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
லண்டனின் கிரென்பெல் கோபுர (Grenfell Tower) தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அந்தத் கட்டிடத்தின் சுவர்களில் பதிந்துள்ள தங்களின் அன்புக்குரியவர்களின் கைரேகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்தப் பயங்கரத் தீ விபத்தின் போது, கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அடையாளங்களாகவும், அவர்களின் கடைசி நினைவுகளாகவும் அந்தச் சுவர்களில் உள்ள கைரேகைகள் கருதப்படுகின்றன.
உணர்வுப்பூர்வமான தடயங்கள்
சிதைந்துள்ள அந்தக் கட்டிடத்தை இடிப்பது அல்லது சீரமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த உணர்வுப்பூர்வமான தடயங்கள் அழிக்கப்படக்கூடாது என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தக் கைரேகைகள் வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல, அவை உயிரிழந்தவர்களின் இறுதி நிமிடப் போராட்டத்தின் சாட்சிகள் என்றும், எனவே அவற்றைப் பிரித்தெடுத்து ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்றும், அந்தச் சுவர்களில் உள்ள நினைவுகளைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப ரீதியான வழிகள் ஆராயப்படும்" என்றும் உறுதியளித்துள்ளார்.
72 உயிர்களைப் பலிவாங்கிய அந்தத் துயரச் சம்பவத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், இந்தக் கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam