புதிய நபர்களையும் மேலும் மூன்று அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் இணைத்துள்ள அரசாங்கம்! வெளியாகியுள்ள தகவல்
உலக தமிழர் பேரவை (GTF) உட்பட ஆறு தமிழ் சர்வதேச அமைப்புகள் மற்றும் 317 தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக தடைப் பட்டியலில் 55 புதிய நபர்களையும் மேலும் மூன்று அமைப்புகளையும் அரசாங்கம் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவால் கையொப்பமிட்டு இந்த ஆண்டு ஜூலை 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தடையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைப்புகள், நபர்கள்
உலகத் தமிழர் பேரவை (GTF), அவுஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸ் (ATC), உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC), தமிழ் ஈழ மக்கள் பேரவை (TEPA), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மற்றும் கனடியத் தமிழர் காங்கிரஸ் (CTC) ஆகியவற்றுக்க்கான தடை நீக்கப்படுள்ளது. 317 நபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்! வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொடர்ந்து தடைப்பட்டியலிலுள்ள அமைப்புகள்
இதில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் ஒருவராவார். தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழ் மறுவாழ்வு அமைப்பு (TRO), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் சேவ் தி பேர்ல் உள்ளிட்ட 15 அமைப்புகளின் மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
இந்த தடை நீக்கம் குறித்து கருத்துரைத்த இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய முழுமையான விசாரணையைத் தொடர்ந்து தடைப் பட்டியலில் சேர்ப்பது அல்லது பட்டியல் நீக்கம் செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் புலம்பெயர் அமைப்பான, உலக தமிழர் பேரவை, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய அவர், பயங்கரவாதம் தொடர்பான விடயங்களுக்கு, குறித்த அமைப்பு நிதியளித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்! பிரதமரின் பகிரங்க அறிவிப்பு |