தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: நாட்டுக்கு பேரிழப்பு : சஜித் சாடல்
தற்போதைய அரசாங்கம் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டு மக்களுக்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆதாரங்களை வெளியிட்டதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என்பதை அரசாங்கமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்கள் சேதமடையும் அபாயம் அதிகரித்துள்ளது.
பெரும் நிதிச் சுமை
நிலக்கரியிலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு 11-15% ஆக இருக்க வேண்டிய நிலையில், தற்போது அது 21% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடுமையான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தரம் குறைந்த நிலக்கரியால் மெகாவாட் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்த இடைவெளியை நிரப்ப அதிக செலவு கொண்ட எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.

அத்துடன் "2009 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் 30வது பிரிவின்படி, முறையான மற்றும் வினைத்திறனான மின் உற்பத்தியின் மூலமே மக்களிடம் கட்டணம் வசூலிக்க முடியும். அரசாங்கத்தின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் நட்டத்தை 75 இலட்சம் மின் நுகர்வோர் மீது சுமத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது." என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆராய நிபுணர் குழுக்களுக்குப் பதிலாக ஒரு தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நடத்தப்பட வேண்டும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மேலும் இந்த ஊழல் மூலம் விரயமாக்கப்பட்ட பணத்தைக் கொண்டு பாடசாலைகள், வைத்தியசாலைகளை கட்டியிருக்கலாம் அல்லது ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri