அச்சம் வேண்டாம்! சம்பளம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு
சம்பளம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளம் அல்லது சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை.
அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்தை வெளிப்படுத்திய பந்துல
கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
