ஜனாதிபதி ரணில் அமைச்சுக்களுக்கு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில் ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri