இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையை நாட்டுக்கு கொண்டு வந்த சந்தேக நபர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய, நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் நபர் என தெரியவந்துள்ளது.
ப்ளை டுபாய் விமான சேவை
அவர் இன்று அதிகாலை 04.00 மணியளவில் டுபாயில் இருந்து ப்ளை டுபாய் விமான சேவையின் FZ-569 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளார்.

குறித்த நபர் கொண்டு வந்த 2 பயணப் பைகளுக்குள் இருந்து பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட Top Gun வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.