7 சதவீத சலுகை வட்டியுடன் வழங்கப்படவுள்ள கடன் தொகை

Ranil Wickremesinghe Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Benat Jul 19, 2024 03:20 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் 7% சலுகை வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

  

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகயிலாளர் மாநாட்டிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக முடிவுகளில் மிகவும் வலுவான முடிவாக அமையும் என்பதை நாம் அறிவோம். இவ்வாறான வேளையில் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நாட்டின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான களமொன்று அமைக்கப்பட வேண்டும்.

7 சதவீத சலுகை வட்டியுடன் வழங்கப்படவுள்ள கடன் தொகை | Sri Lanka Economic Crisis

மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் பகிரங்க விவாதங்களுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் செய்த சாதகமான விடயங்கள் மூலம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடிந்தது.

இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் நிபுணர்களை பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

 புதிய கடன் திட்டம்

கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை விரிவாக தெளிவுபடுத்த நிதி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் தயாராக உள்ளேன்.

7 சதவீத சலுகை வட்டியுடன் வழங்கப்படவுள்ள கடன் தொகை | Sri Lanka Economic Crisis

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான புதிய கடன் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் 7% சலுகை வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. இதற்காக 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, மத்திய தரத்திலான தொழில்களை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன் கீழ், அதிகபட்சமாக 10 மில்லியன் ரூபாவிற்கு உட்பட்ட கடனைப் பெற முடியும். அத்துடன் சிறிய தேயிலை தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு 06 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு 02 பில்லியன் ரூபா வழங்கப்படும். கடன் உத்தரவாத நிறுவனம் ஒன்றின் தேவை காணப்படுகிறது. அந்த கடன் மூலம், எதிர்வரும் ஒக்டோபரில் கடன் உத்தரவாத நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடனுக்கான பிணையொன்றை வைக்க முடியாத வேளையில் கடன் உத்தரவாத நிறுவனம் அதற்கான உதவிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார். 

வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்

வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்

புலம்பெயர் தமிழர்களுக்கு வைத்தியர் அர்ச்சுனா விடுத்துள்ள எச்சரிக்கை

புலம்பெயர் தமிழர்களுக்கு வைத்தியர் அர்ச்சுனா விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US