இலங்கையர்களுக்கு மருத்துவர் விடுத்த அவசர எச்சரிக்கை
சமகாலத்தில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
“உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், மிக முக்கியமான விடயம் ஓய்வெடுப்பதாகும். அதாவது அன்றாட நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு செல்பவராக இருந்தால் சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது விடயம், இயன்றளவு திரவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த சரியான அளவு பாராசிட்டமால் மாத்திரை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதைத் தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. டிஸ்பிரின் மற்றும் எஸ்பிரின் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. அதன் மூலம் டெங்கு இருந்தால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுத்தும்.
இரண்டாவது நாளிலும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். முழுமையான இரத்த பரிசோதனைக்கு செல்லவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.