நிதி திட்டம் தொடர்பில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ள இலங்கை
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழு பரிசீலிப்பதற்கு முன்னதாக பொதுவான நிலையை அடையும் நோக்கில் தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடன் கலந்துரையாடல்களை தொடர இலங்கை (Sri Lanka) அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அதன் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பில், பத்திரதாரர்களின் தற்காலிக வழிகாட்டுதல் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை இணக்கமின்றி முடித்துள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சகம் நேற்று (17.04.2024) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது,
இலங்கையின் நிதியமைச்சு
இந்த வழிநடத்தல் குழு ஒட்டுமொத்தமாக பத்து பெரிய உறுப்பினர்களைக் உள்ளடக்கியுள்ளதுடன் இறையாண்மை பத்திரங்களின் மொத்த நிலுவைத் தொகையில் 50 வீதத்தைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் நிதியமைச்சு தனது அறிக்கையில், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும் மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்கு வருவதற்கு கட்சிகள் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய நிதியில் இலங்கைக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பத்திரதாரர்களின் வழிநடத்தல் குழு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நீடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நிதியமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், அறிக்கையொன்றை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe), இலங்கை அதிகாரிகள் அனைத்து கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிலும் நல்ல நம்பிக்கையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா Cineulagam
