இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் இணையும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பொருத்தமான விசாரணை
அந்த அறிக்கையில் மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய பொலிஸ் மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்தால், அந்த அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட மாட்டார் அல்லது பணியில் மீண்டும் சேர அனுமதிக்கப்பட மாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
