பாணின் விலையை குறைக்க தீர்மானம்
பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஒரு கிலோகிராம் செரண்டிப் மற்றும் ப்ரீமா கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, பாணின் விலையை குறைக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல.
10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது.
முன்வைக்கப்படும் கோரிக்கை
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என கூறியுள்ளார்.
ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |