மூன்றாண்டுகளில் மூன்று முறை உயரும் அரச ஊழியர்களின் சம்பளம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மூன்றாண்டுகளில் மூன்று முறை அரச ஊழியர்களின் சம்பளம் உயரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்த வரவு செலவுத் திட்டத்தை சமகால ஜனாதிபதிவாசிப்பது போன்ற உணர்வை இந்த வரவு செலவு திட்டம் ஏற்படுத்தியதாக நாமல் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிடடுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை போன்றது. மிகவும் நல்லது. ரணில் விக்ரமசிங்க தயாரித்த வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி வாசிப்பதை போன்று உணர்ந்தேன்.
ஏனெனில் வரவு செலவுத் திட்டம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளைப் போன்றது. அரசு ஊழியர்களின் சம்பளமும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் உயர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது.
அப்படி தான் தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இப்போது, மூன்று ஆண்டுகளில் மூன்று முறை உயரும். அதுவும் நல்ல விஷயம்தான். ஒன்றுமே நடக்காமல் இருப்பதற்கு ஏதாவது நடந்தால் நல்லது தான்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
