அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது – நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம்(17) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் மக்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களை ஒடுக்க முயற்சி
ஊடகங்களையும், பொதுமக்களையும் அரசாங்கம் ஒடுக்க முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கிராமிய பிரதிநிதிகளுக்கு இந்த விடயத்தை அரசாங்கம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளை, அகுரெஸ்ஸ மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ போன்ற பகுதிகளில் பொதுமக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |