விசேட சுற்றிவளைப்பில் 291 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (21) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 104 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 106 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும், கஞ்சா செடிகளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 144 கிராம் 866 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 117 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 252 கிராம் 683 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளும், 7103 கஞ்சா செடிகளும் , 5004 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |