அதிரடி மாற்றம் காணும் தங்க விலை!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.
அதன்படி, இன்றைய தினம் (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,035,976 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,550 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 292,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 268,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 277,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 255,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
