யாழில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
மல்லாகம்
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடத்தப்பட்டதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கருத்திட்டத்திற்கமைவாக நாடு பூராகவும் முன்னெடுக்கபடும் யுக்திய விசேட செயற்றிட்டம் இன்று (5.1.2023) வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கமகே தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் சந்திக்கு அண்மையில் மாலை ஆரம்பமான குறித்த செயற்றிட்டத்தில் பொலிஸார் மோப்பநாய் சகிதம் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
யுக்திய சின்னம்
இதன்போது சோதனைக்குட்படுத்தபட்ட வாகனங்களுக்கு யுக்திய 2024 சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கரும் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த யுக்திய சோதனை நடவடிக்கைகளில் காங்கேசன்துறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பருத்தித்துறை
பருத்தித்துறை பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் இன்று (5.1.2023) பிற்பகல் 7:30 மணியிலிருந்து பருத்திதுறை நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பருத்த்தித்திறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் பருத்தித்துறை உதவி போலிஸ் அத்தியட்சகர் இலங்ககோன் வழிகாட்டலில் குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மோப்ப நாயின் உதவி
மோப்ப நாயின் உதவியுடன் நெடுந்தூர பேருந்துகள், உள்ளூர் சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டன.
இதில் மேலதிகமாக இராணுவம், சிறப்பு அதிரடி படையினர் ஆகியோரின் இச்சோதனை நடவடிக்கையில் எந்தவிதமான போதை பொருட்களும் இதுவரை கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |