நாமல் பொது வேட்பாளர் அல்ல! சஜித் கட்சியின் விசேட அறிவிப்பு
2029 ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை நிறுத்தும் எவ்விதத் திட்டமுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (02.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாமலின் அழைப்பில் இந்தியா போகவில்லை
எமது கட்சியின் இளைய உறுப்பினர்கள் ஒன்றும் நாமலின் அழைப்பில் செல்லவில்லை.அவர்கள் செலவும் செய்யவில்லை.எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர்கள் சென்றனர்.

இந்த நிகழ்விற்கு நாமல் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சக்களுடன் சேர மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.