நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் தனிநபர் பிரேரணை!
சமூக ஊடக வலைத்தளங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சட்டமூலத்திலுள்ள கட்டுப்பாடுகள்
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்படவுள்ளது. சமூக ஊடக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக, வயதெல்லை மற்றும் பெற்றோரின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தல்.
வலைத்தள வழங்குநர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கடமைகளை வித்தல். குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விடயங்களுக்கான கட்டுப்பாடுகள் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் தீங்கைக் குறைப்பதற்கான சட்டங்களை பல நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அத்தகைய சட்டம் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் சிக்கலை பொருட்படுத்தாது இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி:விமல் வீரவங்ச வெளியிட்ட இரகசிய தகவல்கள்
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri