அடாவடியில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி:பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தை பிடித்ததாக பொலிஸில் முறைப்பாடு!
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள குறித்த வளாகத்தில் நேற்று (2.01.2026) நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் கத்தி கூச்சலிட்டு அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வாகனத்தில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் , வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.
ஆனால், வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்துவதற்கான இடமிருக்கவில்லை.ஆதலால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரை கட்டிடத்தின் அருகே இறங்கி வாகனத்தை வெளியே அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கத்தி கூச்சலிட்டு அச்சுறுத்தல்
வாகனத்தில் இருந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அடையாளம் காணாததால் பாதுகாப்பு அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.அதனால் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் அவருடன் இருந்த பெண்ணும் அதிகாரியை கத்தி கூச்சலிட்டு மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் இருந்து இறங்கிய அர்ச்சுனா, பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தைப் பிடித்து,நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எந்த இடத்திற்கும் போக தனக்கு உரிமை உண்டு என்று கூறி, அந்த அதிகாரியின் கையடக்க தொலைபேசியை தரையில் அடித்து நொறுக்கியுள்ளார்.
மற்ற அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.பின்னர் அவர் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் 18ஆவது மாடிக்குச் சென்றுள்ளார்.
மன்னிப்புக் கோரல்
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், தனது தேவையை நிறைவேற்றி திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது தவறை ஒப்புக்கொண்டு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் சேதமடைந்த கையடுக்க தொலைபேசியை சரிசெய்ய 1000 ரூபா கொடுத்துவிட்டு விட்டு வெளியேறியுள்ளார்.
தொடரும் சிக்கலை பொருட்படுத்தாது இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி:விமல் வீரவங்ச வெளியிட்ட இரகசிய தகவல்கள்
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri