திலீப பீரிஸ் தொடர்பில் சாமர சம்பத் எம்.பி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸை அவதூறாக பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (03.01.2026) நடைபெற்ற இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய எம்.பி.
தொடரும் சிக்கலை பொருட்படுத்தாது இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி:விமல் வீரவங்ச வெளியிட்ட இரகசிய தகவல்கள்
திலீப பீரிஸ் இரவில் நடத்தும் நாடகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையானவர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்.
திலீப பீரிஸ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னகோனுடன் இணைந்து இரவில் மது அருந்தி விருந்துபசாரத்தில் ஈடுபடுவதாகவும் இருவரும் தோல் மேல் கை போட்டுக் கொண்டு இரவில் அனைத்து மோசமான செயல்களிலும் ஈடுபட்டவர்.
தென்னகோனுக்கு பிரச்சினை ஏற்பட்ட பின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் தொன்னகோன் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்ததாக திலீப பீரிஸ் தெரிவித்திருந்தார்.அதாவது எவ்வித நாகரீகமும் பழக்கவழக்கமும் அற்றவர்.

அவர் எந்தப் பதவி வகித்தாலும் எமக்கு பிரச்சினையில்லை.இவ்வாறான ஆட்களைத் தான் அரசு வைத்துள்ளது.இவர் அரசாங்கத்தை பிடித்து கொண்டு சட்டமா அதிபர் பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்.
அரசாங்கம் நினைப்பதை நாங்கள் செய்ய விடமாட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.