பெற்றோல் கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை வெளியிட்ட தகவல்
பெற்றோல் 92 ஒக்டேன் ஐந்து (05) கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை சிங்கப்பூரின் M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை பொற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் மார்ச் 15 முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் 92 ஒக்டேன் பெரல் 300,000 5% கொண்ட ஐந்து கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு பொற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழங்குனர்களிடம் ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வழங்குனர்கள்
இதற்காக 06 வழங்குனர்கள் ஏலங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஏலங்களை மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, ஒப்பந்தம் சிங்கப்பூரின் M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.