முல்லைத்தீவின் கிராமம் ஒன்றிற்கு இராணுவத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பகுதி ஒன்றில் வாழும் மக்களுக்கு இராணுவத்தினரால் முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேசத்தில் கொக்காவில் செல்லும் வீதியில் உள்ள ஆலங்குளம் சந்தியில் பாலை மரம் ஒன்றில் இந்த அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப்பயிற்சி
ஆலங்குளம் சந்தியில் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்ட விசேட அறிவிப்பில் 17.06.2024 தொடக்கம் 21.06.2024 வரையான காலப்பகுதியில் இராணுவப்பயிற்சி இந்த பிரதேசத்தில் நடைபெற்று வருவதால் மின்சாரவேலி, துப்பாக்கிபிரயோகம், மற்றும் இராணுவ நீதிவிரோத செயல்களை செய்யவேண்டாம் என்பதுடன் இந்த பிரதேசத்திற்குள் செல்ல தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் 57 ஆவது காலால் படைப்பிரிவினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |