பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கோரி கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை(Trincomalee) கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் பயிலும் மாணவன் ஒருவன் தாக்கப்படமைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(19) கப்பல்துறை சரஸ்வதி பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தாக்கப்பட்ட மாணவன்
சம்பவத்தில், கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் செல்வன் ரமேஷ் இத்திக்க உதார எனும் மாணவனே தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை(14) அன்று பாடசாலையில் மாலை நேர வகுப்பு முடிவடைத்து வீட்டுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நீதி கோரி அப்பகுதி மக்களும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரும், பொலிஸாரும் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
