கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
புதிய இணைப்பு
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் நேற்றைய தினம் (19) 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிலும் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி - கருணாபுரம் குடியிருப்பை சேர்ந்த 26 பேர் இன்று(19) காலையில் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளால் திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர் என்பதுடன் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |