பிரித்தானியாவின் தமிழ் சமூகம் குறித்து டேவிட் கமரூன் வெளியிட்ட தகவல்
பிரித்தானிய (United KIngdom) தமிழர்களுக்கான கென்சவேர்ட்டிவ் கட்சியின் (Conservative Party) அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது எனவும் பிரித்தானியாவில் தமிழ் சமூகம் என்பது பெரும் வெற்றிக்கதை எனவும் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் (David Cameron) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் தமிழ் சமூகத்தின் பங்களிப்பை பாராட்டியுள்ள அவர், அனைவருக்கும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் மோசமான விளைவுகள்
அத்துடன், பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு வர்த்தகம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளிற்கும் எப்போதும் ஆதரவளிப்போம் எனவும் டேவிட் கமரூன் உறுதியளித்துள்ளார்.
1948ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த முதல் பிரதமர் நான் என தெரிவித்துள்ள கமரூன், யுத்தத்தின் மோசமான விளைவுகள் குறித்து அப்பகுதி மக்களிடம் நேரடியாக கேட்டறிந்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றுக்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தலைமைதாங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..! சாணக்கியன் கேள்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 8 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
