லண்டனில் மூடப்பட்ட பிரதான பாலம்
லண்டன் நகரில் அமைந்துள்ள பிரதான பாலமான செல்சியாஸின்(Chelsea Bridge) வடக்குப் பகுதி ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்து தாமதமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதாலயே இந்த பாலம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது நேற்று(19.06.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் லண்டன் நோயாளர் காவு வண்டி சேவை குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடந்துவருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், செல்சியா பாலம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri
