கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் அபாயம்
கனடாவிற்கும்(Canada) இந்தியாவிற்கும் இடையில் அண்மைக் காலமாக நிலவி வரும் விரிசல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜ்ஜாரிற்கு கனேடிய நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய துணைத் தூதரகம்
இதற்கிடையில் நிஜ்ஜாரின் படுகொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என கனேடிய அரசாங்கம் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகிறது.
23 June 2024 marks the 39th Anniversary of the cowardly terrorist bombing of Air India flight 182 (Kanishka), in which 329 innocent victims, including 86 children, lost their lives in one of the most heinous terror-related air disasters in the history of civil aviation. (2/3)
— India in Vancouver (@cgivancouver) June 18, 2024
இந்தியாவும் அதனை மறுத்து வருகிறது இவ்வாறான ஓர் பின்னணியில் நிஜ்ஜாருக்காக கனேடிய நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை இரு நாடுகளின் உறவுகளில் முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் நிஜ்ஜார் ஓர் காலிஸ்தானி தீவிரவாதி என இந்தியா அடையாளப்படுத்தியுள்ளது. அத்துடன் கலிஸ்தான் தீவிரவாதிகளினால் 1985ஆம் ஆண்டில் இந்திய விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வான்கூவாரில் இந்தியா நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டதன் நினைவாகவே, இந்திய துணைத் தூதரகம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதியுடன் 39 ஆண்டுகள் பூர்த்தியாவதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |