மீண்டும் சூடு பிடிக்கும் தென்னிலங்கை - அதிரடியாக களமிறங்கும் மகிந்த
தென்னிலங்கையில் அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில், ராஜபக்சர்கள் தங்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை, தென்னிலங்கையில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இதன தமக்கு சாதகமான பயன்படுத்தி, மீண்டும் இனவாத ரீதியான அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்க ராஜபக்சர்கள் முயன்று வருகின்றனர்.
எதிர்ப்பு போராட்டம்
இவ்வாறான நிலையில் சமகால அநுர அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஈடுபட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளவிய ரீதியில் இருந்து பெருமளவான மக்களை ஒன்றிணக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
தன்னை தேடி தங்காலை வரும் மக்களை சந்திக்கும் நோக்கில் வீட்டில் இருக்கப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
திருகோணமலை புத்தர் விவகாரம்
இந்நிலையில் திருகோணமலை புத்தர் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தானும் ஆர்ப்பாட்ட களத்தில் இறங்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பில் தன் பங்கேற்க மாட்டேன் என அறிவிக்கப்பட்டாலும், நிச்சயம் எதிர்ப்பு போராட்டத்தில் தனது பிரசன்னம் இருக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் எனவும், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு குழுவொன்று இருக்க வேண்டும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் ரீல் மகள் சாராவா இது? ரன்வீர் சிங்குக்கு ஜோடி.. வெளிவந்த 'துரந்தர்' படத்தின் டிரைலர்.. Cineulagam