கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த தொழிலதிபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகளினாலும், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினராலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் கைது
கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று பிற்பகல் 05.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் பிளாட்டினம் 07 வகையைச் சேர்ந்த 46,800 சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.