உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இடையூறு
இன்று (14) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை
மேலும், மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
