கனேடிய மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கனடாவில்(Canada) பணம் அல்லது சொத்துக்களை இழந்தவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் தொலைக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது மறந்து போன சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் அல்பேர்ட்டா மாகாண அரசாங்கமே இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிமை கோரப்படாத சொத்து பதிவு
இவ்வாறு உரிமை கோரப்படாத 154 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த 2023ஆம் ஆண்டில் இவ்வாறு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான உரிமை கோரப்படாத பணம் 650 பேருக்கு மீள வழங்கப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தின் உரிமை கோரப்படாத சொத்து பதிவு புத்தகத்தில் இந்த தகவல்கள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிலருக்கு தாங்களுக்கு இவ்வாறு பணம் அல்லது சொத்துக்கள் இருப்பதே தெரியாது என மாகாண நிதி அமைச்சர் நேட் ஹோர்னர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 8500 பேருக்கு 14 மில்லியன் டொலர் பணம் மீள வழங்கப்பட்டுள்ளது.
தொலைந்த பணத்தை உரிமை கோருவதற்கு பத்தாண்டு கால அவகாசம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
