அதிகரிக்கும் போர் அச்சுறுத்தல் : ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்ள தீவிர போர் பயிற்சியில் இஸ்ரேல்
இஸ்ரேலின்(Israel) வடக்கே ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படும் நிலையில் இஸ்ரேலின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் பாதுகாப்பு படை மற்றும் தேசிய அவசரகால கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பயிற்சியில் உள்துறை அமைச்சகத்தின் மந்திரி மோஷே ஆர்பெல் மற்றும் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ரோனன் பெரெட்ஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் அச்சுறுத்தல்
இதனால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த போர் பயிற்சியானது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதிதீவிர போருக்கு பதிலடி தரும் வகையில் தயார்படுத்துவது மற்றும் படைகளை மதிப்பீடு செய்வது உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அரசின் முடிவுகளுக்கு உட்பட்டு எங்களுடைய அமைச்சகத்திற்கு வரும் ஒவ்வொரு விசயமும், உத்தரவின்படியே நடைபெறுகின்றன.
அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் கடிதம் ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் செயல்படுவோம் என்று உள்துறை அமைச்சின் இயக்குநர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
