ஈரான் போர் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சாட்சியம்
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை அதிகாரிகள், ஈரான் போர் மற்றும் அது தொடர்பான உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து நாடாளுமன்றக் குழுவின் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
இது குறித்த ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகளான தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் மற்றும் சி.ஐ.ஏ (CIA) இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர், ஈரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடையும் நிலையில், செனட் சபையின் உளவுத்துறை குழு முன் சாட்சியமளிக்க உள்ளனர்.
உளவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க
குறிப்பாக, ஈரான் போரின் தற்போதைய நிலை, அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பு மற்றும் இந்த மோதலால் ஏற்படக்கூடிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து செனட்டர்கள் அவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் அமெரிக்க வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்து வருவதால், இது குறித்த வெளிப்படையான தகவல்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருப்பது, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததுதான். ஈரானால் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும், இஸ்ரேலின் அழுத்தத்தாலேயே இந்தப் போர் தொடங்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜோ கென்ட்டின் இந்த அதிரடி முறைப்பாடு குறித்து உளவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலை மீது தவறுதலாக ஏவுகணை வீசப்பட்டதில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கும், காலாவதியான உளவுத் தகவல்களே காரணம் என்று கூறப்படுவதால், இது குறித்தும் அதிகாரிகள் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam