இடமாற்றம் போர்வையில் மோசடி - செவிலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
செவிலியர்களின் வருடாந்த இடமாற்றம் என்ற போர்வையில் பணம் வசூலித்து மோசடி இடம்பெற்று வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சகத்தின் செயலாளர் அனில் ஜாசிங்க அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார்.
இடமாற்றம் வழங்குவதாக இடம்பெறும் மோசடி
சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி, செவிலியர்களின் இடமாற்றங்கள் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அல்லது மாகாண சுகாதார அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சகங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துப்பூர்வமான கோரிக்கையின் பேரில் தவிர, செவிலியர்கள் வேறு எந்தத் தரப்பினருக்கும் தகவல்களை வழங்கக்கூடாது என்றும் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற மோசடி அல்லது ஊழல் தொடர்பான தகவல்களை அமைச்சகத்திடம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.