அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 03ஆம் திகதி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கால நீடிப்பு
குறித்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் தபால்களில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு (www.election.gov.lk) பிரவேசிக்கவும்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan