ஆட்கடத்தலை தடுப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட கூட்டுத் திட்டம்!
மனித கடத்தல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டுத் திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனித கடத்தல் தடுப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே ரவி செனவிரத்ன இதனை கூறியுள்ளார்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று(05.12.2024) இடம்பெற்றுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனம்
இந்த சந்திப்பில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, திணைக்களம் சமூக சேவைகள், தொழிலாளர் அமைச்சகம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, சுவிஸ் தூதரக பிரதிநிதிகள் உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
