மன்னார் மாவட்ட காணி பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று மன்னார் அபிவிருத்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு காணி அமைச்சின் செயலாளர் பங்கு பற்றுதலுடன் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட காணி பிரச்சினை
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மன்னார், மாந்தை மேற்கு , நானாட்டன் மற்றும் மடு ஆகிய பிரதேச மக்கள் பாவனையில் காணப்படும் காணிகள் பிரதேச செயலாளர்களின் ஆலோசனை இல்லாமல் வனவள திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளமையால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளமை தொடர்பாக பிரதேச செயலாளர்கள் ஊடாக காணி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டது.
அதே நேரம் அரச காணிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக காணி ஆவணங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் காணி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதே நேரம் காணி ஆவணங்கள் பெறுதல் தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக காணி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் காணி அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
தலைவர், செயலாளர் மற்றும் வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
பணிப்பாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச பிரதேச
செயலாளர்கள் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
