மன்னார் மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உறுதி (Video)
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் மக்களின் பயண்பாட்டுக் காணிகள் மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க (C.B.Ratnayake) தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் இன்று (16) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காணிகள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படுவதோடு, மக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பலவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமை தொடர்பாக வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள காணி தொடர்பாக பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது பிரதேச செயலாளர்கள் தமது பிரிவில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் குறிப்பாக மக்களின் பயன்பாட்டில் உள்ள பல ஏக்கர் விவசாய காணிகள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன் வைக்கின்ற பல பிரச்சினைகள் உடனே தீர்க்க முடியாத காரணத்தினால் விசேட குழு ஒன்றை நியமித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழை வாயிலுக்கும், கலா ஓயாவிற்கும் குறுக்கே தொங்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை சி.பி.ரத்நாயக்க நாட்டியமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
