போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
முழு நாடும் ஒன்றாக என்ற தொனிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செயலணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
போதைப் பொருள் அழிப்பு
அத்துடன், பொலிசாரின் சோதனைகளின் போது கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை உடனடியாக அழிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இன்மை காரணமாக, கைப்பற்றப்படும் போதைப் பொருட்களின் ஒரு பகுதி மீண்டும் போதை வியாபாரிகளின் கைகளில் சென்றடையும் சாத்தியம் இருப்பது குறித்து இதன்போது விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை உடனடியாக அழிப்பதற்கான சட்டத் திருத்தம் ஒன்றை மிக விரைவில் தயாரித்து அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam