அநுர தரப்புக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சை
சபாநாயகர் அசோக ரன்வல்லவின்(Ashoka sapumal rangwalla) கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்(Saritha Herath) தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அநுர தரப்புக்கு சிக்கல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சபாநாயகர் அசோக ரன்வல்ல தன்னை ஒரு கலாநிதியாக காட்டிக் கொண்டமை தான் இங்கு பிரச்சினை, எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிநுட்ப அதிகாரியாக கடமையாற்றியுள்ளாரே தவிர, பொறியியலாளர் என்ற அளவில் கூட இல்லை.

அவருடைய கலாநிதி பட்டம் தொடர்பில் இன்று பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கொண்டு செல்லாமல் தன்னுடைய கல்வித் தகைமைகளை அவர் பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.
இது ஒரு சாதாரண பிரச்சினைதான். இது பாரியதொரு பிரச்சினை அல்ல. ஆனால், அநுர தலைமையிலான இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சபாநாயகர் தொடர்பான இந்த சர்ச்சை மிகப் பெரியதாக பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்: அதிக ஊதியம் வழங்கும் துறை எது தெரியுமா? News Lankasri
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri