தென்கொரிய விமான விபத்து குறித்த பதிவுகள்: வெளியான முக்கிய தகவல்
தென் கொரியாவில் (South Korea), ஏற்பட்ட விமான விபத்தின் போது விமானத்தின் கறுப்பு பெட்டி (Black box of Plane), தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குறித்த விமான விபத்திற்கு 4 நிமிடங்களுக்கு முன்னதாகவே அதன் கறுப்பு பெட்டி, பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் 179 பேர் பலியாகினர். இந்தநிலையில், விபத்து ஏற்பட்டதுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அந்த நாட்டு அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் அவ்விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கறுப்புப் பெட்டி
இதனை தொடர்ந்து, விமானத்தின் கறுப்பு பெட்டிகள் பதிவை நிறுத்துவதற்கான காரணங்கள் தொடர்பில் ஆரம்பக் கட்ட பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கறுப்புப் பெட்டியில் முக்கியமான சில தரவுகள் இல்லாமல் போயுள்ளமை தொடர்பில் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் கறுப்பு பெட்டி, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜேஜு விமான நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளமையை தென்கொரிய போக்குவரத்து அமைச்சு கண்டறிந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |