யாழில் புரையேறியதில் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை
யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் இன்றையதினம்(12) உயிரிழந்துள்ளது.
சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரணம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குழந்தை நேற்றையதினம் (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறிய பின்னர் குழந்தை உறங்கியுள்ளது.

உறங்கிய குழந்தை நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam