மீண்டும் மொட்டுக்கட்சியுடன் இணைய தயாராகும் ரணிலின் சகாக்கள்
முன்னாள் அமைச்சர் நிமல் லான்சா(Nimal Lanza) தலைமையிலான தரப்பு மீண்டும் பொதுஜன பெரமுண கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த நிமல் லான்சா, கடந்த 2022ஆம் ஆண்டின் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய முன்னணி என்ற பெயரில் களம் அரசியலில் களம் இறங்கினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த இவர்கள், பொதுத் தேர்தலிலும் ரணிலின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர்.
அரசியல் செயற்பாடு
எனினும் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் (களுத்துறையில் ரோஹித அபேகுணவர்த்தன தவிர) இவர்களது அணியில் யாரும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நிமல் லான்சா தரப்பு கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிமல் லான்சா தலைமையிலான அணி மீண்டும் மொட்டுக் கட்சியில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
