அதிகாரப் பகிர்வுக்கு மொட்டுக் கட்சி தயார்..! சாகர காரியவசம் திட்டவட்டம்

SLPP Sagara Kariyawasam Election
By Rakesh May 15, 2026 02:53 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறியுள்ளார்.

பசிலின் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்! மல்வானையில் பெரும் பரபரப்பு

பசிலின் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்! மல்வானையில் பெரும் பரபரப்பு

பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது 

மேலும் தெரிவிக்கையில், "மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வடக்கு - கிழக்கில் தோல்வி உறுதியெனத் தெரிந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தேர்தலை நடத்தினார். 

அதிகாரப் பகிர்வுக்கு மொட்டுக் கட்சி தயார்..! சாகர காரியவசம் திட்டவட்டம் | Slpp Ready Power Sharing Sagara Kariyawasam552485

2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போட மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்கின. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும்.

தேர்தல் முறைமை குறித்து ஆராய

எனவே, இவ்விரு அதிகாரங்களைத் தவிர்த்து ஏனையவற்றைச் சகல மாகாணங்களுக்கும் பகிர்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

அதிகாரப் பகிர்வுக்கு மொட்டுக் கட்சி தயார்..! சாகர காரியவசம் திட்டவட்டம் | Slpp Ready Power Sharing Sagara Kariyawasam552485

தேர்தல் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலின் ஊடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்றும் சாகர காரியவசம் இதன்போது தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வவுனியாவை சென்றடைந்தது..!

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வவுனியாவை சென்றடைந்தது..!

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US