இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி
புதிய இணைப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் 27 வருட எதிர்பார்ப்பானது இன்றைய தினம் நிறைவேறியுள்ளது.
இந்திய அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடர்களை இலங்கை அணி இதுவரைகாலமும் இழந்து வந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிகண்டதன் மூலம் அந்த சோகமான வரலாற்றை இலங்கை முறியடித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையுடன் மோதியது.
இதில் முதல் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததுடன் இரண்டாவது போட்டியை இலங்கை அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 111 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
ஐந்தாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் தொடரில் இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுபமன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டெல் ஆகியோர் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்படி இந்திய அணியானது 11 ஓவர் நிறைவில் 74 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது.
மேலும் இலங்கை பந்துவீச்சாளரான துணித் வெள்ளாளகே 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
நான்காம் இணைப்பு
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் தொடரில் இலங்கை அணி 50 ஓவர் 248 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதிரடியான ஆரம்பத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் முதலாவது விக்கட் 89 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ அதிக பட்சமாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 45 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 249ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஸ்க பெர்ணான்டோ சதத்தை தவறவிட்டுள்ளார்.
102 பந்துகளை எதிர்கொண்ட அவர் 96 ஓட்டங்களை பெற்றவேளை ரியான் பரக்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர், 9 நான்கு ஓட்டங்களையும், 2 ஆறு ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அணி தற்போது 36 ஓவர் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தை மேற்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.
நாணய சுழட்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிசங்க, அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.
இதன்பின்னர் அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் இலங்கை அணி பத்தும் நிசங்கவை முதலாவது விக்கட்டாக இழந்தது.
எனினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க தனது 8ஆவது அரைச்சதத்தை கடந்திருந்தார்.
முதலாம் இணைப்பு
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை - இந்திய அணிகள்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதாலும், இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணி தொடரை வெற்றிக்கொள்ளும்.
இந்திய அணி வெற்றி பெற்றால் போட்டி சமநிலையில் முடியும்.
இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், அது இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது ஒருநாள் தொடராக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதோடு, மேலும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|