பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றிய இலங்கை
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுக்களையும், சரித் அசலங்க மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
குறித்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிட்டதக்கது.
மூன்றாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 241 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர் நிறையில் 9விக்கட்டுக்களை இழங்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 30ஓவர் நிறைவில் 130 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்துள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க முதல் பந்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேற இதன் பின்னர் இணைந்த குசல் மென்டிஸ் மற்றும் அவிஸ்க ஜோடி இலங்கை அணியை சாதகமான நிலைக்கு செல்ல வழிவகுத்தது.
முதலாம் இணைப்பு
இந்திய அணியுடனான டி20 தொடரை இழந்ததன் பின்னர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களின் திறன் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு சென்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியானது சமநிலையில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக வணிந்து ஹசரங்கவின் வெளியேற்றம் காணப்படுகிறது.
இரண்டாவது போட்டி
போட்டியானது இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி 47.3 ஓவர் நிறைவில் 230 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |