கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி
கொழும்பு மாவட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண் அதிகரிப்பு போக்கையே பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காணி மதிப்பீட்டுச் சுட்டெண் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6%இனால் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று உப சுட்டெண்களிலும் பிரதிபலித்துள்ளதுடன், அவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

வளர்ச்சிப் போக்கு
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில், காணி மதிப்பீட்டுச் சுட்டெண் மற்றும் அதன் உப சுட்டெண்கள் அரையாண்டு அடிப்படையில் மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.
இதில் வர்த்தக மற்றும் வதிவிட உப சுட்டெண்கள் உயர்ந்த வளர்ச்சி வேகத்தைக் காட்டியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam