இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கைக்கு மற்றுமொரு பின்னடைவு
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) இந்திய அணிக்கெதிரான எஞ்சியுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
மாற்று வீரர்
குறித்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், உபாதை காரணமாக அவர் தொடரிலிருந்து வெளியேறவுள்ளமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், இன்றைய (04.08.2024) போட்டியில் வனிந்து ஹசரங்கவுக்கு மாற்று வீரராக ஜெஃப்ரி வாண்டர்சே (Jeffrey Vandersay) களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
